மியன்மாரில் இருந்து பங்களாதேஸ் சென்ற படகு ஒன்று கவிழ்ந்தது

0
15

மியன்மாரில் இருந்து பங்களாதேஸ் சென்ற படகு ஒன்று கவிழ்ந்தது

பங்காளதேஸில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 15 ரோஹிங்கியா ஏதிலிகள் பலியானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மியன்மாரில் இருந்து பங்களாதேஸ் சென்ற படகு ஒன்று கவிழ்ததிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் சுமார் 100 பேர் வரையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுள்; குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பங்களாதேஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினேவில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஏதிலிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

பங்களாதேஸில் இருந்து குடிபெயர்ந்த இவர்கள் மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து தமக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மியன்மார் இராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சி ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஏதிலிகளாக பங்காளதேஸிற்கு தப்பிச் செல்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பார் மாதம் ஏற்பட்ட படகு கவிழ்ந்ததில் 15 ரோஹிங்கியா ஏதிலிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments