மியன்மாரிலுள்ள ரோஹிங்கியர்களுக்கு இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி இல்லை -திணைக்களம்

0
63

மியன்மாரிலுள்ள ரோஹிங்ய முஸ்லிம்கள் அகதிகளாக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.மியன்மாரிலுள்ள

அவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாக இருந்தால், மியன்மார் நாட்டின் கடவுச் சீட்டு பெற்றிருக்க வேண்டும்.

இருப்பினும், ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு வேறு நாடுகளுக்கு செல்வதற்கு வீசா வழங்கப்படுதில்லை. அத்துடன், அவர்களுக்கு செல்லுபடியான கடவுச் சீட்டை மியன்மார் அரசாங்கம் வழங்கவில்லை.

இவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாயின் சட்ட விரோதமான வழிகளிலேயே வரவேண்டும் என இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வருகை தந்த அகதிகள் எனக் கூறப்படுவோர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ரோஹிங்ய பிரச்சினைக்கு முன்னர் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதியே வருகை தந்திருத்ததாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments