மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அரசாங்கம் வலியுறத்தல்

0
68

மின் உற்பத்தி நிலையங்கள் சார்ந்த நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது.
மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்கமாறு பிரதியமைச்சர் அஜித் பத்மகாந்த பெரேரர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் பிரதியமைச்சர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

மின்சார நெருக்கடியை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக 60 மெகாவொட் மின்சலுவை கொள்வனவு செய்யவும், 20 மெகாவொட் மின்வலுவை தேசிய வலைப்பின்னலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.

இலங்கை மக்கள் நாளொன்றில் 2 ஆயிரத்து 300 மெகாவொட் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறையும் பட்சத்தில் தொடர்ச்சியாக 24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிப்பது கஷ்டமானது என அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments

comments