மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் அரச தொழிற்சங்கங்கள்

0
25

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக அரசு மருந்துகள் அதிகாரிகள் சங்கம் தலைமையில் துறைசார் எட்டு தொழிற்சங்கங்கள் மே மாதம் முதல் வாரம் தொடர்க்கம் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் வைத்திய கல்வியை பயிலும் மாணவர்கள் வைத்தியர் பட்டத்தை உள்நாட்டிலேயே பெறுவதற்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரச மருந்துகள் அதிகாரிகள் சங்கம், அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் என நாட்டின் துறைசார் பல்வேறு அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் போர்க்கொடி உயர்த்தியமை மாத்திரமின்றி நாடாளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்த வண்ணம் உள்ளன.

மாலபே தனியார் வைத்திய

இந்நிலையில், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை நிராகரிக்க முடியாது நாட்டுக்குத் தனியார் கல்வி அவசியம் என்று அரசு வலியுறுத்தியதுடன், அரச வைத்தியசாலைகளில் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் நடத்தப்படும் போட்டிப் பரீட்சையில் தோற்றம் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததுடன், அதற்கு மாலபே தனியார் மருத்துவக் கால்லூரியின் உயர்பீடமும் இணங்கியுள்ளதாகக் கூறியது.

என்றாலும், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியை பெற்றுவிட்டு உள்நாட்டிலேயே பட்டம் பெறுவது பொருத்தமற்றது என்பதுடன், நாட்டின் எதிர்கால சுகாதார நிலைக்கு கேடை விளைவிக்கும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் அரச மருந்துகள் அதிகாரிகள் சங்கத்துடன் துறைசார் எட்டு தொழிற்சங்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளன. அண்மைய காலமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments