மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி இறுதித் தீர்மானம்10 ஆம் திகதி – அமைச்சர் ராஜித

0
44

மாலபே தனியார் மருத்துவ மனையான சைட்டம் மருத்துவக் கல்லூரியின் தரம் தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை இலங்கை வைத்திய சபைதான் வழங்க வேண்டும்.

எதிர்வரும் 10 ஆம் திகதி சைட்டம் குறித்த தீர்மானமொன்றை வழங்குவதாக இலங்கை மருத்துவ சபை தன்னிடம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சரும், இணை அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இச்சபை இது குறித்து ஆராய நாளை விசேட கூட்டமொன்றை இலங்கை மருத்துவ சபை ஏற்பாடு செய்துள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சைட்டம் தொடர்பிலான தீர்மானமொன்றை கேட்க வேண்டியது, தன்னிடமல்ல எனவும், இலங்கை மருத்துவ சபையிடமே எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடிந்த மாணவர்களுக்கு பட்டமளிப்பதற்கான அனுமதியை உயர் நீதிமன்றம் வழங்கியதையடுத்து நாட்டில் பாரிய போராட்டங்கள் வெடித்தன. தொடர்ச்சியாக அரச மருத்துவ சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கை மருத்துவ சபையின் தீர்மானம் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments