பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய ஆவலாக உள்ளேன் : மார்லன் சாமுவேல்ஸ்

0
65

பாகிஸ்தான் இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு ஆவலாக இருப்பதாக பாகிஸ்தான் சூப்பர் லீக் ரிருவென்ரி இறுதி போட்டியில் வெற்றிபெற்ற பெஷாவர் சல்மி அணி சார்பில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் மார்லன் சாமுவேல்ஸ் தெரிவித்துள்ளார்.

லாகூர் கடாபி மைதானத்தில் கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது, பாகிஸ்தான் இராணுவத்தினர் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தலைவணங்குவதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மார்லன் சாமுவேல்ஸ்

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நான் ஜமைக்காவின் இராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளேன். தற்போது பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய ஆவலாக உள்ளேன். பாகிஸ்தான் இராணுவம் அனுமதித்தால் எந்நேரத்திலும் இணைந்துகொள்ள தயாராக உள்ளேன்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல உயர்மட்ட சர்வதேச வீரர்கள் லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை புறக்கணித்திருந்தனர். ஆனால், அதனை சவாலாகக் கொண்டு பாகிஸ்தான் இராணுவத்தினர் சிறப்பான பாதுகாப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com