மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்…

0
986

மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில ்சந்தேகத்தின் பேரில் மருமகன், காலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண், அதிக இரத்தப்போக்கின் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தூங்கிக்கொண்டிருந்த மாமியிடம் சென்ற 25 வயதுடைய குறித்த இளைஞன் அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தின் போது கைதுசெய்யப்பட்ட இளைஞன் இரு குழந்தைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், சம்பவம் தொடர்பில் மேதிலக விசாரணைகளை  காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments