மாணவியைத் தாக்கிவிட்டு ஓட்டோவில் கடத்திய கும்பல்

0
37

வெலிகம முதுகமுவ பிரதேசத்தில் வசித்துவரும் பாடசாலை மாணவியொருவரை ஓட்டோவில் வந்த குழுவினர் கழுத்தைப் பிடித்துத் தாக்கிவிட்டு வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று தலுகஸ்வில பிரதேசத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இது குறித்து வெலிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கிணங்க சந்தேகநபரைக் கைதுசெய்யும் வகையில் வெலிகம பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

17 வயது மாணவி வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கையிலேயே ஓட்டோவில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவி அவரது தந்தைக்கு தொலைபேசி மூலம் இச்சம்பவம் தொடர்பாகத் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தந்தை காயத்துக்குள்ளான தனது மகளை மீட்டுச்சென்று வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com