மாணவர்கள் மீது சிற்றூர்ந்தைவிட்டு தாக்குதல் – பிரான்ஸ்

0
24

மாணவர்கள் மீது சிற்றூர்ந்தைவிட்டு தாக்குதல் – பிரான்ஸ்

பிரான்ஸில் மாணவர்கள் மீது சிற்றூர்ந்து ஒன்று மோதி தாக்கியதில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

தென் மேற்கு பிரான்சில் அமைந்துள்ள டுலூஸ் (Toulouse) நகரின் அருகே ஒரு கல்லூரிக்கு வெளியே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சாரதி தாம் செலுத்திவந்த சிற்றூர்ந்தை மாணவர்கள் மீது செலுத்தி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலை நடத்திய 28 வயதான குறித்த சிற்றூர்ந்து சாரதி கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேரும் சீன நாட்டவர்கள் என்றும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com