மாணவர்கள் பயன்படுத்தும் வீதிகள் பிரதேச சபை கவனம் செலுத்துவதில்லை

0
17

ஜனாதிபதி அல்லது பிரதமர் விஜயம் செய்வது என்றால் இரவோடு இரவாக வீதிகள் புனரமைக்கப்படுகின்ற ஆனால் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் வீதிகள் தொடர்பாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை கவனம் செலுத்துவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குற்றம் சுமத்தினார்.ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை செயலாளர் க.பேரின்பராஜா, அரச திணைக்கள பிரதிநிதிகள் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இங்கு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை செயலாளர் க.பேரின்பராஜா பதிலளிக்கையில் – உள்ளுராட்சி திணைக்களம் முதலமைச்சரின் அமைச்சின் கீழ் உள்ளது அவர்கள் எழுத்து மூலம் கட்டடளையிட்டால் நாங்கள் நிறைவேற்ற வேண்டும்.

ஏறாவூர்ப் பற்றில் 39 கிராம சேவகர் பிரிவில் 210 கிராமங்கள் உள்ளன. சகல கிராமங்களிலும் பிரச்சினைகள் முன்வைப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்துக்கும் வேலை செய்கிறோம். கடந்த மூன்று மாதங்களுக்குள் 29 மில்லியன் செலவில் வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. கிறவல் ஏற்றுவதற்கான அனுமதியினை புவிசரிதவியல், அளவை சுரங்கங்க் பணியகம் வழங்கவில்லை என்றார்.

மட்டக்களப்பு இலுப்படிச்சேனை பிரதேசத்தில் மணல் அகழ்வு, குடிநீர் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பாக பல தடவை ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முன்வைத்த போதிலும் இதுவரை தீர்வும் கிடைக்கவில்லை மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கிகன்றனர் என இலுப்படிச்சேனை கிராம அபிவிருத்தி சங்கத்த தலைவர் சி.சர்வானந்தன் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்வதற்காக தனியார் எவருக்கும் அனுமதி வழங்கப்படக்கூடாது. கமநல மற்றும் கிராம அபிவிருத்தி அமைப்புகளுக்கு மாத்திரம் மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்க வேண்டும் என கடந்த முறை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது ஆனால் தற்போது தனியாருக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் கூட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் பதிலளிக்கையில் – மணல் அகழ்வின் போது விஷேட அதிரடிப்படை துப்பாக்கிப் பிரயோகம் செய்து இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவதத்தையடுத்து பொதுமக்களுக்கும் விஷேட அதிரடிப்படையினருக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலையின் போது ஒரு இளைஞர் கூட கைதுசெய்யப்பட கூடாது என நானும் சக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஐயாவும் போராடிய போது யோகேஸ்வரன் ஐயாவின் வாகனத்துக்க கல்லால் எறிந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.

மணல் அகழ்வு தொடர்பாக குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மக்களின் பிரச்சினை தொடர்பாக போராடும் அரசியல் பிரதிநிதிகள் விமர்சிக்கப்படுகிறார்கள். மாவட்டத்தில் நடைபெறும் அநீதிக்கு எதிராக நாங்கள் போராடினால் அரச புலனாய்வு ஊடகங்கள எங்களுக்கு எதிராக எழுதுகின்றன.

சவுக்கடி கிரமத்திலுள்ள அரச காணிகளை பணம் படைத்தவர்கள் சட்டவிரோதமாக சுவீகரிக்கிறார்கள் இது தொடர்பாக நாங்கள் பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம் அந்த பகுதியில் உள்ள அரச காணிகள் பாடசாலை மற்றும் கிராம மட்ட அமைப்புகளுக்குத் தேவையான காணிகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என கிராம மட்ட அமைப்புகள் தெரிவித்தனர்

பாராளுனமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கருத்து தெரிவிக்கiயில் – காணிகள் அத்துமீறி சுவிகரிக்கப்பட்டால் கிராம சேவை அதிகாரி பிரதேச செயலாளர் ஊடாக சட்ட நடவடிக்கையெடுக்க முடியும். காணி அதிகாரம் பிரதேச செயலாளரிடம் உள்ளது. யாரும் அரச காணி உறவுகளுக்குள் மாற்றப்படுவதாயினும் பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். வாகரைப் பிரதேசத்தில் அரச காணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதை தடுத்திருக்கிறேன். பல காணிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

Comments

comments