மாணவர்கள் தீங்கான வெளிக் காரணிகளில் கவனம் செலுத்தாது பல்வகை ஆற்றல், அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும் – மட்டு அரச அதிபர்

0
26

மாணவர்கள் தீங்கான வெளிக் காரணிகளில் கவனம் செலுத்தாது பல்வகை ஆற்றல், அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும் – மட்டு அரச அதிபர்

மட்டு அரச அதிபர்

தீங்கு விளைவிக்கக் கூடிய வெளிக் காரணிகளில் கவனம் செலுத்தாது, அவற்றில் இருந்து பாதுகாப்பதுடன் பல்வகையான ஆற்றலையும் அறிவையும் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரனையுடன் தொழிற்படும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பெண்கள் வலுவூட்டல் செயத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் சிறப்புரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இளைஞர் அபிவிருத்தி அகத்தின் சிறப்பான பணியை பராட்டி வாழ்த்துவதுடன் பெண்கள் வலுவூட்டல் செயத்திட்டத்தின் ஊடாக வறிய குடும்பங்களில் வாழ்கின்ற கஸ்ரபிரதேசத்தில் இருந்து முன்னுரிமைப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கழுக்கான கல்வி ஊக்குவிற்பு கொடுப்பனவை பெறும் மாணவர்கள் இதை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். அத்துடன் மாணவர்கள் கல்வியில் உயரிய வளர்ச்சி காண வேண்டும் இன்றைய நவீன காலத்தில் பலதரப்பட்ட, வாய்ப்புக்கள் காணப்படுவதால் மாணவர்கள் தொழில்நுட்பரீதியாகவும் மொழிரிதீயாகவும் மேம்படுத்த வேண்டும்.

இன்றைய சூழலில் தீங்கு விளைவிக்கக் கூடிய வெளிக் காரணிகளில் கவனம் செலுத்தாது அவற்றில் இருந்து பாதுகாப்பதுடன் பல்வகையான ஆற்றலையும் அறிவையும் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறான சேவைகளை முன்னெடுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்புக்கு பராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வெல்லாவெளி, பட்டிப்பளை, கிரான், வவுணதீவூ, வாழைச்சேனை ஆகிய ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் நலிவுற்ற குடும்பங்களில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவான மிகவும் பொருளாதாரத்தில் கஸ்ர நிலையில் வாழும் மாணவர்களை கிராமமட்ட பெண்கள் குழுக்களின் அனுசரனையுடன் இவ் ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர்  தர்சினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 61 கஸ்ரமான நிலையில் வாழும் குடும்பங்களில் உள்ள பல்கலைக்கழகம் கற்கும் மாணவர்களுக்கு தலா 5000 ரூபா படி 59 மாணவர்களுக்கு காசோலையாக இவ் உதவிகள் வழங்கப்பட்டன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement