மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் “சாம்பியன்’

0
33

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், டோமினிச் திம்மை சாய்த்து 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 5ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 9ஆம் நிலை வீரர் டோமினிச் திம்மை (ஆஸ்திரியா) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 76 (108), 64 என்ற நேர்செட்டில் டோமினிச் திம்மை சாய்த்து 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

இந்த சீசனில் ரபெல் நடால் தொடர்ச்சியாக வென்ற 3ஆவது பட்டம் இதுவாகும். ஏற்கனவே மான்டிகார்லோ, பார்சிலோனா ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். 30 வயதான ரபெல் நடால் கைப்பற்றிய 30ஆவது ஏ.டி.பி.மாஸ்டர்ஸ் பட்டம் இதுவாகும். இதன்மூலம் அதிக மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்று இருந்த செர்பியா வீரர் ஜோகோவிச்சின் சாதனையை சமன் செய்தார். இந்த வெற்றியின் மூலம் ரபெல் நடால் உலக தர வரிசையில் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 4ஆவது இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டோமினிச் திம் 2 இடங்கள் ஏற்றம் கண்டு 7ஆவது இடத்தை பெற்றார்.

வெற்றிக்கு பிறகு ரபெல் நடால் அளித்த பேட்டியில், தொடர்ச்சியாக 3 பட்டங்களை வெல்வது கடினமான காரியமாகும். முக்கியமான 3 போட்டிகளையும் வென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் ரோம் பட்டத்தையும் வெல்ல முடியும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments