மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்

0
23
மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் முன்வைத்த தீர்மானத்தை கிழக்கு மாகாண சபை ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்று இடம்பெற்ற இறுதி அமர்வில் கிழக்கு மாகாண சபை இந்தத் தீர்மானம் ஏற்க்கொள்ளப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு  அதிகாரம் வழங்கப்படுவதென்பது, மக்களாட்சி முறைமைக்கு எதிரானதாகும் என முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவசர காலச் சட்டங்களில் மாத்திரமே ஆளுனருக்கு ஆட்சியில் பங்கேற்கக் கூடிய சாத்தியப்பாடு அரசியலமைப்பில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்திற்கு முரணாக  மக்களால் தமது மாகாண சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை அரசாங்கம் இல்லாமலாக்கியுள்ளதாக முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களால் தெரிவுசெய்யப்படாத ஒரு தனி நபரிடம், ஆட்சியை கையளிப்பது  சர்வாதிகாரப் போக்குடைய நிலைமையை மாகாணத்தில் ஏற்படுத்தும்.
மாகாணம் தொடர்பாக தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படுவது, சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கில் மீண்டும் பழைய நிலைமையை ஏற்படுத்தும் முயற்சியா என்ற சந்தேகம் எழுவுதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments