அரிசிக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது – மஹிந்த

0
42

தான் நாட்டை ஒப்படைக்கும் போது அரிசியில் தன்னிறைவு காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இருந்த நாட்டில் இன்று, அரிசியை ஏற்றி வரும் கப்பலை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரிசி கப்பல் வருவதற்கு தாமதம் ஏற்பட்டால் சோறு சாப்பிடாமல் நாட்டு மக்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் அல்லது சோறு சாப்பிடுவதை மக்கள் கைவிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நஞ்சு பொருட்கள் கலக்காத அரிச பற்றி பேசிய நிலையில், இன்று வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படும் அரிசியில் என்ன நஞ்சுப்பொருட்கள் உள்ளது என்று அறியாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பொது வாக்கெடுப்பாக பார்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com