மஹிந்த நாளை பாகிஸ்தான் விஜயம்

0
18
Want create site? Find Free WordPress Themes and plugins.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு நாளை விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு உரையாற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் 2017 தேசிய பாதுகாப்பு மற்றும் யுத்தம் தொடர்பிலான மாநாட்டில் இவர் உரையாற்றவுள்ளார்.

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்கான பல்கலைக்கழகத்தின் தலைவரான லெப்டினன் ஜெனரல் ரிஸ்வான் அக்தாரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மஹிந்த நாளை

முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த விஜயத்தில் கலந்துகொள்ள உள்ளனர். நாளை பாகிஸ்தானுக்கு செல்லும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு தொடர்ந்தும் 7 நாட்கள் அங்கு தங்கியிருந்து பலதரப்பட்ட சந்திப்புகளிலும் கலந்துகொள்ள உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments