மஹிந்த ஆட்சிகாலத்திலும் பார்க்க நல்லாட்சி அரசின் ஆட்சியில் முஸ்லிம் சமூகம் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது

0
536

மஹிந்த ஆட்சிகாலத்திலும் பார்க்க நல்லாட்சி அரசின் ஆட்சியில் முஸ்லிம் சமூகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஆரையம்பதி ஒல்லிக்குளம் பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அதனாலேயே 95 சதவீத முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஆட்சியையே மாற்றினார்கள். ஆனால், இன்று அதைவிட மிகமோசமாக முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.


முஸ்லிம்கக்கெதிரான அடக்கு முறைகளைகளை ஒழிப்போம் என ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் அதனை இதுவரை நிறைவேற்றவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலைமை தொடர அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்து பேசவிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மஹிந்த

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments