மஹிந்த அரசின் மூன்று ஊழல் அறிக்கைகள் இவ்வாரம் ஜனாதிபதியின் கைகளில்

0
32

முன்னாள் அரசின் காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட மூன்று இறுதி அறிக்கைகள் இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்தது.

மஹிந்த ராஜபக்ச
மஹிந்த ராஜபக்ச

கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் முகமாக பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். இந்தக் குழு கடந்த அரசில் இடம்பெற்றதாக கூறப்படும் பல்வேறு ஊழல் மோசடிகளை விசாரணை செய்து அறிக்கைகளையும் ஜனாதிபதியிடமும் கையளித்துள்ளது.

அதில் முக்கியமான அறிக்கைகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச தொலைக்காட்சியொன்றில் தேர்தல் விளம்பரங்கள் ஒளிப்பரப்பியமைக்கான பணத்தை மீள செலுத்தாமை மற்றும் பஸில் ராஜபக்ஷ தொடர்பிலான ஊழல் அறிக்கைகள் காணப்படுகின்றன.

தற்போது அப்பாந்தோட்டை துறைமுகத்துக்கு நீர் நிரப்பு விழாவுக்காக செலவிடப்பட்ட பணத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பிலான அறிக்கை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சட்டவிரோமான முறையில் நியமங்கள் வழங்கி சம்பளம் வழங்கியமை மற்றும் சிறப்புரிமைகள் வழங்கியம் தொடர்பிலான அறிக்கை, வீதி வலையமைப்பை நடைமுறைப்படுத்தும் கருத்திட்டத்திற்கமைய சட்டவிரோதமான முறையில் லேன் குரூஸ் வேன் வண்டியொன்று பயனப்டுத்தப்பட்டமைமை உள்ளிட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்ட மூன்று அறிக்கைகளே இவ்வாரம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments