மஹிந்தானந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

0
54

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயிற்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

மஹிந்தானந்தவினால் விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு இந்த அனுமதியை அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை இந்த அனுமதி செல்லுபடியாகும். இருப்பினும், இவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வேறு வழக்குகளுக்கு வருமாறு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், நோட்டீசு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments