மஹிந்தானந்தவுக்கு பிணை

0
16

மஹிந்தானந்தவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சராக இருந்தபோது நிதி பெற்றுக்கொள்ளப்பட்டமைக்கான உரிய ஆவணங்களை வெள‘ப்படுத்தாமல் பொரளை, கின்ஸி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மஹிந்தானந்தவுக்கு

அந்த வீட்டை கொள்வனவு செய்வதற்காக 27 மில்லியன் ரூபா நிதி பயன்படுத்தப்பட்டதாக சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, முன் வைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com