மஹிந்தவும் எதிரணியினரும் அவசர கலந்துரையாடல்

0
33

கொழும்பு அரசியல் சூழ்நிலை மிகவும் பரபரப்பாக உள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே நேற்றிரவு முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.மஹிந்தவும்  எதிரணியினரும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச குற்றப் புலனாய்வு பிரிவினாலும், அவரின் இளைய புதல்வாரன ரோஹித ராஜபக்ச, காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவினாலும் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், நேற்று இரவு இந்த அவசர கூட்டம் இடம்பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com