மஹிந்தவின் ஊழல்,மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்?!

0
23

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் மஹிந்தவின் குடும்பத்தினர் மற்றும் ஒன்றிணைந்த கூட்டுஎதிரணியின் சில பிரபலங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல்,மோசடி தொடர்பாக விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகளுக்காக நீதிமன்ற வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும. வலியுறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற விவகாரங்கள் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடிப்பது மற்றும் திருடர்களுக்கு தண்டனை வழங்குவது தாமதமாகுவது தொடர்பில் ஜனாதிபதியும்,பிரதமரும் நீதி அமைச்சிடம் விசாரிக்க வேண்டும் என்றும் பிரதிஅமைச்சர் அசோக் அபேசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments