மலையகத்தில் கற்பிக்க இந்திய ஆசிரியர்களை அழைத்துவந்தால் நாடுதழுவிய போராட்டம் வெடிக்கும் : ஆசிரியர் சங்கம்

0
29

மலையகத்தில் கற்பிக்க இந்திய ஆசிரியர்களை அழைத்துவந்தால் நாடுதழுவிய போராட்டம் வெடிக்கும் என்று ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருதானை சி.எஸ்.ஆர். மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.

மலையகத்தில் கணித, விஞ்ஞானப் பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இலங்கையில் தமிழ் மொழிமூலம் கணித, விஞ்ஞானப் பாடத்துறையில் பாண்டித்தியம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் குறைவாக காணப்படுகின்றமையால் பற்றாக்குறை நிலவும் ஆசிரியர்களை இந்தியாவில் இருந்து அழைத்துவர உள்ளதாக அண்மையில் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, மலையகத்தில் பணியாற்ற விரும்பும் வடக்கு, கிழக்குப் பட்டதாரிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவர இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் மலையக மாணவர்களின் கல்வி தொடர்பில் இதுவரையில் எவ்வித கரிசனையும் காட்டவில்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றும் செயற்பாட்டை ஆசிரியர் நியமனத்திலும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement