மரண சடங்குக்கு சென்றவருக்கு எமனான ஓட்டோ

0
286

மரண சடங்குக்கு இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள நபரொருவர் ஆட்டோவொன்றில் சென்றபோது அவ் ஆட்டோ விபத்திற்குள்ளாகியதில் அந்நபர் ஸ்தலத்திலேயே பலியானார்.

மரண சடங்குக்கு

இவ்விபத்து வெலிமடை உடபுசல்லாவ பிரதான பாதையில் ஊவா பரணகம என்ற இடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து ஊவா பரணகம பொலிஸார் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், ஆட்டோ சாரதியைக் கைதுசெய்து அவரை ஊவாபரணகம அரசினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆட்டோவின் அதிக வேகத்தினைக் கட்டுப்படுத்த முடியாமையால் இவ்விபத்து ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். ஊவா பரணகமையைச் சேர்ந்த நோமன் விஜயரட்ன என்ற 46 வயது நபரே விபத்தின் போது மரணமானவராவார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments