மரக்கறி தோட்டமொன்றில் சிசு சடலமாக மீட்பு

0
43

மரக்கறி தோட்டமொன்றில்நோர்வுட் காவற்துறை பிரிவிற்குட்பட்ட கர்கஸ்வொல்ட் எல்பொட தோட்டத்தின் கீழ் பிரிவில் மரக்கறி தோட்டமொன்றில் இருந்து சிசுவொன்றின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நோர்வுட் காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த சிசு இன்று பிறந்திருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த சிசுவின் சடலத்தை நாயொன்று கவ்விச்செல்வதை அவதானித்த தோட்டத்தொழிலாளர்கள் இது தொடர்பில் நோர்வுட் காவற்துறைக்கு தெரிவித்துள்ளனர்.

தோட்ட தொடர் குடியிருப்புக்கு முன்னால் அமைந்துள்ள இந்த மரக்கறித் தோட்டம், தோட்ட தொழிலாளர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சிசுவின் தாயார் யார் என்பது குறித்து பிரதேசத்தின் குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சிசுவின் சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக காவற்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments