மனித உருவத்துடன் பிறந்துள்ள அதிசய ஆட்டுக்குட்டி

0
46

தென்னாபிரிக்காவின் கிழக்கு மாகாணத்தின் உள்ள லேடி பிரேர் என்ற கிராமத்தில் மனித உருவத்தில் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயக் கிராமமான குறித்த கிராமத்தில் 4ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

மூடநம்பிக்கைகளை அதிகம் நம்பும் குறித்த கிராமவாசிகள் இந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்ததும் இது சாத்தானால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,இதனால் குறித்த கிராமத்திற்கு பெரிய ஆபத்து வரப்போவதாக அச்சமடைந்துள்ளதாகவும் தென்னாபிரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மனித உருவத்துடன் பிறந்துள்ள

எனினும் இந்த விடயத்தின் உண்மை தன்மைக் குறித்து ஆராய வைத்தியர் குழுவொன்று குறித்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,இதன்போது இந்த குட்டியை ஈன்ற தாய் ஆடு ஒருவகை வைரஸால் பீடிக்கபட்டமையை அடுத்து குறைமாதத்தில் இந்தக் குட்டியை ஈன்றுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement