மனிதவுரிமைகள் விவகாரத்தில் இலங்கை ஆற்ற வேண்டிய பணிகள் அதிகமாக உள்ளன : ஐ.நாவில் ஹர்ஷ டி சில்வா

0
80

மனிதவுரிமைகள் விவகாரத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றமையை இலங்கை ஏற்றுக்கொள்வதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை மீதான நேற்றை விவாத்தில் இலங்கைக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. எந்த நாட்டிலும் மனித உரிமைகள் தொடர்பான ஆவணமும் முழுமையானது இல்லை. எவ்வாறெனினும் எந்தவொரு நாட்டிலும் மனித உரிமைகள் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும்.

கடந்த காலத்தில் இலங்கையில் மக்கள் மிகவும் சிரமமமான மற்றும் துயரமான காலகட்டத்தை சந்தித்திருந்தனர். அவர்களின் துயர்துடைக்க நிறைய பணிகள் நடந்திருந்தாலும், இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பொறுப்பான ஓர் அரசாங்கமாக இப் பணிகளை செய்து முடிக்கும்

இலங்கையின் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் வலியுறுத்தியிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com