மத்திய மாகாண சபை உறுப்பினர்களுக்கு பிணை

0
15

கைது செய்யப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மத்தியமாகாண சபை

ஹட்டன் பொலிஸாரால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார் மற்றும் கட்சியின் உறுப்பினர்களான மலர்வாசகம், அருள்நாயகி, பாரதிதாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மத்தியமாகாண சபை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு தலா 50 ஆயிரம் ருபா சரீர பிணையில் செல்லவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மத்தியமாகாண சபை

கடந்த 26ம் திகதி தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், புல் பேங்க் தொழிற்பயிற்சி நிலையமாக பெயர் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்தியமாகாண சபை

இதன் போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் ஆதரவாளர்களின், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com