மத்தியமாகாண சபை உறுப்பினர்கள் ஐவர் கைது

0
26

மத்தியமாகாண சபை உறுப்பினர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்தியமாகாண சபை

கடந்த 26ம் திகதி தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், புல் பேங்க் தொழிற்பயிற்சி நிலையமாக பெயர் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்தியமாகாண சபை

இதன் போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் ஆதரவாளர்களின், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியமாகாண சபை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார் மற்றும் கட்சியின் உறுப்பினர்களான மலர்வாசகம், அருள்நாயகி, பாரதிதாசன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியமாகாண சபை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com