மத்தள விமான நிலையம் வருட இறுதிக்குள் இந்தியாவிடம் கையளிப்பு

0
85

மத்தள விமான நிலையமத்தள விமான நிலையத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

மத்தள விமான நிலையத்தினால் 15.6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மத்தள விமான நிலையத்தில் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வது தொடர்பான இந்திய அரசாங்கத்தின் யோசனை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக மத்தள விமான நிலையத்தின் 70 சதவீத உரிமையை 40 வருட காலத்திற்கு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதில் இலங்கை அரசாங்கம் 88 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் என இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தை குத்தகைக்கு விடப்படும்போது, அதில் 49.5 வீத பங்கை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கான யோசனை இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு அதிகமான பங்கு இலாபத்தை இந்திய நிறுவனம் கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com