மதுபோதையால் 72 வயது மூதாட்டியை கற்பழிக்க முயன்றவர் கைது

0
83

மதுபோதையால் நபரொருவர் 72 வயது நிரம்பிய மூதாட்டியொருவரை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயற்சித்தபோது மூதாட்டி எழுப்பிய கூக்குரலால் அங்கு கூடியவர்கள் மதுபோதையிலிருந்த நபரைப் பிடித்து ஹாலிஎலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மதுபோதையால்

ஹாலிஎலைப் பகுதியைச் சேர்ந்த உனுகொல்லை பெருந்தோட்டக் குடியிறுப்பிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தோட்டத்தைச் சேர்ந்த 32 வயது நிரம்பிய பெருமாள் சிவஞானம் என்பவரே இவ்வாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவராவார்.

பூப்புனித நீராட்டு விழா நிகழ்வையொட்டி குறித்த தோட்டக் குடியிறுப்புத் தொகுதியில் விருந்துபசாரமொன்று இடம்பெற்றது. இந்த உபசாரத்தின் போது மதுபான வகைகளும் இருந்துள்ளன. மதுபானம் அருந்தியவர்களில் ஒருவர் மதுபோதையில் 72 வயது நிரம்பிய மூதாட்டியை அறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயற்சித்துள்ளார். அவ்வேளையில், மூதாட்டி எழுப்பிய கூக்குறலால் அங்கு கூடியவர்களால் மூதாட்டி காப்பாற்றப்பட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட முயற்சித்த நபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மதுபோதையிலிருந்த நபர் முதன் முதலாக மதுபானம் அருந்தியவரென்பதும் குறிப்பிடத்தக்கது. ஹாலிஎலைப் பொலிசார் மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement