மணல் ஏற்றி வந்த பாரவூர்தி விபத்து

0
34
பாரவூர்தி விபத்து

மகியங்கனை பகுதியில் இருந்து பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்பிற்க்காக மணல் ஏற்றி வந்த பாரவூர்தி, பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 5.30மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிஸார் கூறினர்.

பாரவூர்தியின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டமையே இந்த விபத்துக்கான காரணம் என, பொகவந்தலாவை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com