மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எதிர்காலத்தில் நான் மக்கள் பிரதிநிதியாக செயல்படுவேன் – மனோ கணேஷன்

0
43

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எதிர்காலத்தில் நான் மக்கள் பிரதிநிதியாக செயல்படுவேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவைக்கு அமைச்சர் மனோ கணேஷன் தலைமைதாங்கினர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேஷன் “பெரியகல்லாறு வைத்தியசாலையை சீரமைத்துத்தருவேன்”, என்னை யாரும் இங்கே ஏன் வந்தாய்? என கேள்வி கேட்க முடியாது, ஏன் எனில் நான் அமைச்சர் எனவும் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில் இங்கிருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குச் சிங்களம் தெரியாது, ஆங்கிலம் தெரியாது. பாராளுமன்றத்தில் இனவாதம் பேசி காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் இங்கு மக்களுக்கு குறைகள் அதிகமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments