மட்டக்களப்பில் சுனாமி பீதி : மக்கள் பெரும் பதற்றம் – வதந்திகளை நம்ப வேண்டாம்

0
201

மட்டக்களப்பில் சுனாமி பீதி : மக்கள் பெரும் பதற்றம் – வதந்திகளை நம்ப வேண்டாம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள் மடம் ஆகிய பகுதிகளில் சுனாமி பீதியால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளதாகவும் , களுவாஞ்சிக்குடியிலுள்ள கிணறுகளிலுள்ள நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் மக்கள் மத்தியில் சுனாமி பீதியேற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பை அண்டிய பகுதியிலுள்ள கடற்பகுதி சீற்றமாக காணப்படுவதாகவும் களுவாஞ்சிக்குடி 50 வீட்டத்திட்டத்திலுள்ள கிணறுகளில் நீர் திடீரென வற்றியதால் சுனாமி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடையம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணைப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையோரத்தை அண்டிய பகுதியில் மக்கள் மத்தில் சுனாமி என்ற பீதி ஏற்பட்டு மக்கள் பீதியடைந்துள்ளார்கள்.

“இதுவரையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மக்கள் வதந்திகளைக் கேட்டு அச்சமடையத் தேவையில்லை.

எனவே, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அச்சம் கொண்டு பீதியடைந்து அல்லோலகல்லோலப்பட வேண்டாம்” என, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணைப்பாளர் எம்.ஏ.சி.முகமட் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com