மக்களை ஏமாற்றுவதற்காகவே அமைச்சரவை மாற்றம் : எதிரணி குற்றச்சாட்டு

0
11

மக்களை ஏமாற்றுவதற்காகவே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டு எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.

பொரள்ளை வஜிரசர்மா பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

தலைவலிக்காக தலையணையை மாற்றுவதென்பது முட்டாள் தனமான செயற்பாட்டாகும். அதுபோலவே இந்த அமைச்சரவை மாற்றமும் இடம்பெற்றுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் பல்வேறு அமைச்சுகள் சம்பந்தமற்ற அமைச்சுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சம்பகமுவ அபிவிருத்தி அமைச்சொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் சப்ரகமுவ மாகாணம் மட்டுமே அபிவிருத்தி செய்ய வேண்டுமா? ஏனைய மாகாணங்களை அபவிருத்தி செய்யவேண்டிய பொறுப்பு அரசுக்கு இல்லையா?.

வெளிவிவகார அமைச்சிற்கு தேசிய லொத்தர் சபை, ஸ்ரீலங்கன் விமானசேவை, மஹாபொல லொத்தர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. வெளிவிவகார அமைச்சுக்கும் லொத்தர் சபைக்கும் உள்ள சம்பந்தமென்ன?
தனிநபர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு இவ்வாறு அமைச்சரவையை மாற்றியுள்ளது. மக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. நிதியமைச்சர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுத்தே அமைச்சரவை மாற்றமானது இடம்பெற்றுள்ளது.

நிதியமைச்சர் ரவிகருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட அரசு அவரை வேறொரு அமைச்சுக்கு பொறுப்பாக நியமித்திருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும். நிதியமைச்சில் அவரது காலப்பகுதியில் இடம்பெற்ற தவறுகள் தொடர்பில் அவர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments