மக்களின் உரிமைகளை வழங்கக்கூடிய சமஷ்டி முறையிலான அரசமைப்பை எதிர்பார்க்கின்றோம் : கோடீஸ்வரன் எம்.பி.

0
36

மக்களின் உரிமைகளை வழங்கக்கூடிய சமஷ்டி முறையிலான அரசமைப்பை எதிர்பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

கடந்தகால கசப்பான உணர்வுகளை யாவரும் மறந்து அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து எமது உன்னத நோக்கத்துக்காகப் பாடுபட முன்வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அக்கரைப்பற்றில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,

“”இலங்கையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக கட்டமைப்பு ரீதியான அரசமைப்பு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் முழு இலங்கைத்தீவின் மக்களும் ஏகோபித்த ரீதியில் கட்சி, மத வேறுபாடுகளைக் கடந்து சிந்திக்க முன்வந்துள்ளார்கள். இது எமது போராளிகளுக்கும் ஜனநாயகத்தின் மீது பற்றுவைத்து தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமது நிலைப்பாட்டில் தளராமல் எங்கள் அனைவரையும் வழிநடத்தும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகவே நான் கருதுகின்றேன்.

அம்பாறை மாவட்டத்தில் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களின் அளப்பரிய விட்டுக்கொடுப்புகளையும் போராட்டகால பங்களிப்பையும் அவர்களது அர்ப்பணிப்பையும் எவரும் குறைத்து எடைபோட நினைக்கக்கூடாது.

மக்களின் உரிமைகளை

தமிழ் மக்களின் உண்மையான உரிமைக் கோரிக்கைகள், தியாகங்கள், இழப்புகள் சிக்காக்கோ தொழிலாளர்களின் அர்ப்பணிப்பிலும் மேலானது. சிறுபான்மையினம் என்ற காரணத்தினால் மாத்திரம் உரிமைகள் மறுக்கப்பட்டுக் கிடக்கின்றோம்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாக நட்டஈடு வழங்கப்படவில்லை. முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இன்றைய வாழ்க்கைச் சுமையை சமாளிப்பதற்கு அன்றாடம் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். அவர்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் தங்களின் குடும்பங்களுடன் இணைந்து வாழ்வதற்கு அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசு ஆவன செய்யவேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com