உள்ளுராட்சி தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டப்படும் – மகிந்த

0
424

உள்ளுராட்சி தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டப்படும் – மகிந்த ராஜபக்ஸ

மகிந்த

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டும் பொருட்டு சுதந்திர கட்சியின் அனைத்து படைகளும் தம்முடனேயே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது கூட்டம் அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போதே முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்,

தமக்கு ரணிலுடனோ, மைத்திரிபால சிறிசேன உடனோ தொடர்பு இல்லை எனவும், தாம் மக்களுடன் மாத்திரமே தொடர்பில் இருப்பதாகவும் மகிந்தராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சிக்கு காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், சுதந்திர கட்சியின் கொள்கையை காப்பாற்றுவது கூட்டு எதிர்கட்சியே எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இந்த அரசாங்கத்தை தோற்கடிக்கும் முதலாவது வேலைத்திட்டம் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com