7 வயது மகளை கழுத்து நெறித்து கொடூரமாக கொலை செய்த தாய்

0
28
Want create site? Find Free WordPress Themes and plugins.

மாத்தறை – ஹக்மன – தெனகம பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர் தனது 7 வயது மகளை கொலை செய்த சம்பவம்அப்பகுதியிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்தப் பெண் தனது வீட்டினுள் மகளின் கழுத்தை நெரித்து நேற்று இவ்வாறு கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருநந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த கொலை சம்பவம் இடம்பெறும் போது வீட்டில் எவரும் இல்லை எனவும் பின்னர் வீட்டுக்கு வந்த தந்தை, தனது மகளை தேடிய போது அவர் தாயால் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதனடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் கீழ், குறித்தப் பெண்ணுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments