போலி டொலர் நோட்டுகளை அச்சடித்தவர்கள் கைது

0
29

போலி டொலர் நோட்டுக்கள் அச்சடித்த மூவரை தியத்தலாவை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், போலி டொலர் நோட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தியத்தலாவை புற நகர்ப்பகுதியில், இடம்பெற்றுள்ளது.

தியத்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட வீட்டை சுற்றிவளைத் போது போலி டொலர் நோட்டுக்கள் அச்சடித்துக்கொண்டிருந்தமை தெரியவந்தது. அச்சடித்து வைக்கப்பட்டிருந்த 5200 போலி டொலர் நோட்டுக்கள் மற்றும் அந்நோட்டுக்களை அச்சடித்த கனிணி இயந்திரத் தொகுதிகள், வர்ணங்கள் அடைக்கப்பட்ட போத்தல்கள் ஆகியவற்றையும், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் நபர்கள் விசாரணையின் பின்னர், பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதுடன், கைப்பற்றப்பட்ட நோட்டுக்கள் மற்றும் ஏனைய பொருட்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுமென்று தியத்தலாவைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments