போலி ஐயாயிரம் ரூபா நோட்டுடன் மந்திரவாதி கைது

0
32

போலி ஐயாயிரம் ரூபா நோட்டுடன் மந்திரவாதி ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தலைப் பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு விற்பனை நிலையமொன்றில் மந்திரவாதியொருவர் போலி ஐயாயிரம் ரூபா நோட்டொன்றைக் கொடுத்து, பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார். அந்நோட்டில் மாற்றமொன்றை இருப்பதைக் கண்ட விற்பனை நிலைய உரிமையாளர், அருகேயிருந்த பொலிஸாரிடம் கூறவே, பொலிஸார் அம் மந்திரவாதியைக் கைது செய்ததோடு போலி நோட்டையும் கைப்பற்றினர்.

இதேவேளை, அதே பகுதியின் லுணுகம் வெஹெர என்ற இடத்தில் வர்த்தக நிலையமொன்றில், ஆட்டோவில் வந்த இருவர் போலி ஐயாயிரம் ரூபா நோட்டொன்றைக் கொடுத்து மூன்று கிலோ சீனி வாங்கிய போது நோட்டில் சந்தேகம் கொண்ட வர்தத்க நிலைய உரிமையாளர் லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவே அங்கு விரைந்த பொலிஸார் போலி நோட்டைக் கைப்பற்றியதுடன், இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களின் கைப்பையை சோதனையிட்ட பொலிசார், அக்கைப்பையில் மேலுமொரு போலி ஐயாயிரம் ரூபா நோட்டொன்றினைக் கண்டுபிடித்து அதனையும் கைப்பற்றினர்.

மீட்கப்பட்ட போலி ஐயாயிரம் ரூபா நோட்டுக்கள் குறித்து கைது செய்யப்பட்ட மூவருடன் பொலிஸார் தீவிர புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments