போலியான வாகன அனுமதிப்பத்திரங்களை தயாரித்தவர் கைது

0
52

போலியான வாகன அனுமதிப்பத்திரங்களை தயாரித்தவர் கைது

மாத்தறை – அகுருகொட பகுதியில், இரகசியமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட போலி, வாகன சாரதி அனுமதி பத்திரம் தயாரிப்பு மத்திய நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கொடவில காவல்துறையினர் மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 5 பிறப்புச்சான்றிதழ்கள், போலியாக தயாரிக்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிபத்திரங்கள் 4, வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இவர் வாகன சாரதி அனுமதிபத்திரம் மற்றும் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, மாத்தறை, வெலிகம, திஹகொட, அஹங்கம மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com