பொலித்தீன் பாவனைக்கு செப்டம்பர் 1 முதல் தடை

0
48

பொலித்தீன் பாவனைக்கு செப்டம்பர் 1 முதல் தடை

பொலித்தீன்
banned
 நாட்டில் பொலித்தீன் பாவனையை தடைசெய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இருப்பினும் 2018 ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கமே அதற்கான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.

பொலித்தீன்
banned

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலித்தீன்
banned
பொலித்தீன் பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொலித்தீன் உற்பத்தியாளர்களுக்கு மாற்றீடுகளை அறிமுகம் செய்து அவர்களை அதில் ஈடுபடுத்துவதற்காகவே எதிர்வரும் ஜனவரி மாதம் வரை காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement