இரத்தினக்கல் ஏற்றுமதி மீதான NBT நீக்கம், பொலித்தீன் தயாரிப்பு மீது 10 வீத வரி

0
135

இரத்தினக்கல் ஏற்றுமதி மீதான NBT நீக்கம், பொலித்தீன் தயாரிப்பு மீது 10 வீத வரி

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக பொலித்தீன் தயாரிப்பு மீது 10 வீத வரியை அறவிட உள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

மீள் ஏற்றுமதிக்காக இரத்தினக் கற்களை கொண்டு வருதல் மற்றும் கற்களை பட்டை தீட்டுதலின் போது விதிக்கப்பட்டிருந்த தேசத்தை கட்டியெழுப்பும் வரி ( NBT) நீக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

அதேநேரம் மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பயணிகள் பஸ்கள் மீது காபன் வரி அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக அந்த துறையுடன் சம்பந்தப்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்கள் மீதான இறக்குமதி வரி நீக்கப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com