பொறியிலாளர்களுக்கான நியமனக்கடிதங்களை வட மாகாண ஆளுநர் வழங்கி வைத்தார்

0
20

பொறியிலாளர்களுக்கான நியமனக்கடிதங்களை வட மாகாண ஆளுநர் வழங்கி வைத்தார்.

பொறியிலாளர்களுக்கான

வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் சேவைக்கு இணைக்கப்பட்ட பொறியிலாளர்களுக்கான நியமனக்கடிதங்களை வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே நேற்று (01.11.2017) வழங்கி வைத்தார்.

வட மாகாணத்தில் நிலவும் பொறியியலாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் 7 பொறியலாளர்களுக்கான நியமனங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

பொறியிலாளர்களுக்கான

நேற்று காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகன்ராஸ், ஆளுநரின் உதவிச் செயலாளர் ஏ.ஏக்ஸ். செல்வநாயகம், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பொறியிலாளர்களுக்கானபொறியிலாளர்களுக்கான

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com