பொருளாதார அபிவிருத்திக்கான அடித்தளத்தையமைக்க இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது என்கிறார் பிரதமர்

0
20

பொருளாதார அபிவிருத்திக்கான அடித்தளத்தை இடுவதற்கு இரண்டுவருடங்கள் தேசிய அரசுக்கு தேவைபட்டது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“வலுவான பொருளதாரத்தை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

பொருளதார அபிவிருத்தி வேகத்தை நூற்றுக்கு 6 வீதம் வரை அதிகரிப்பதை இலக்காக கொண்டு பல்வவேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கின்றோம். அபிவிருத்தி உபாய மார்கத்தின் கீழ் அந்நிய செலவாணி , வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கவும், தனியார் துறையை மேலும் விரிவுபடுத்தி பொருளாதார முன்னேற்றங்களை செய்ய எதிர்பார்க்கின்றோம்.

தனியார் முதலீடுகள் மூலம் நாட்டின் தொழிற்துறை , கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்து இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக மாற்றும் நோக்கத்தை நோக்கியே பயணிக்கின்றோம். அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வோம். அம்பாந்தோட்டை துறைமுகத்தால் அன்று 46 பில்லியன் ரூபாவை இழந்தோம்.
2020இல் இந்த கடன் சுமையை குறைத்துக்கொள்ளக் கூடியவாறான பொருளதாரத்தை கட்டியெழுப்புவோம் என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments