ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “

பொட்டு

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.வசனம்   –  செந்தில்   /   ஒளிப்பதிவு   –   இனியன் ஹரீஷ்

இசை   –  அம்ரீஷ்   /   பாடல்கள்   –  விவேகா, கருணாகரன்,சொற்கோ

ஸ்டன்ட்   –  சூப்பர் சுப்பராயன்  /   எடிட்டிங்   –  எலீசா

கலை  –  நித்யானந் / நடனம்    –  ராபர்ட்

தயாரிப்பு மேற்பார்வை  –  ஜி.சங்கர்

தயாரிப்பு  –  ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார்  –  வடிவுடையான்.

படம் பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்..

பொட்டு

பக்கா ஹாரர்  படமாக இது இருக்கும். படப்பிடிப்பு மொத்தம் 90 நாட்கள் நடைபெற்றது. பரத் இந்த படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார். நமீதாஇதுவரை நடிக்காத  வித்தியாசமான வேடமம் ஏற்றுள்ளார்.தமிழில்  ( பொட்டு ), தெலுங்கில்  ( பொட்டூ ) , ஹிந்தியில்  ( பிந்தி )  என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

பொட்டு
சமீபத்தில்   இந்த படத்திற்காக பாடலாசிரியர் ஏக்நாத் எழுதி அம்ரீஷ் இசையில் உருவான “ அடி போடி சண்டாளி “ என்ற பாடல் காட்சியை கேரளாவில் உள்ள அதிரம்பில்லி என்ற இடத்தில் உள்ள அருவியில்  பரத் – சிருஷ்டி டாங்கே பங்கேற்க படமாக்கினோம். அந்த பாடல் தற்போது பட்டி தொட்டியெங்கும் பட்டையக் கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது பொட்டு  என்றார் இயக்குனர் வடிவுடையான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments