பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் இன்று நிறைவு

0
27
பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் இன்று நிறைவு
பேரறிவாளனின் சிறை
ரஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அண்மையில் சிறைவிடுவிப்பில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
பேரறிவாளனுக்கு தமிழக அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு மாத கால சிறைவிடுவிப்பை வழங்கியது. இதன்படி, இன்று மாலையுடன் அவரது சிறைவிடுவிப்பு காலம் நிறைவடைகின்றது.
இந்த சிறை விடுவிப்பு காலத்தில் ஆயிரத்து 560 க்கும் மேற்பட்டவர்கள் பேரறிவாளனை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பேரறிவாளனின் சிறைவிடுவிப்பு காலத்தை நீடிப்பதற்கு தமிழக அரசாங்கம் இதுவரையில் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லையென தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பேரறிவாளனுக்கு மேலும் சில நாட்கள் சிறை விடுவிப்பு வழங்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் தமிழக அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
Advertisement