பேச்சுவார்த்தை தோல்வி: பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

0
25

பேச்சுவார்த்தை தோல்வி: பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் இணக்கம் எட்டப்படாத நிலையில், ரயில் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்கின்றது.

அதன்காரணமாக, தொடர்ந்தும் ரயில் சேவைகள் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரயில்  தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

அதனையடுத்து, போராட்டத்தை தொடர ரயில் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் உள்ளிட்ட ரயில் தொழிற்சங்கங்கள் சில இணைந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்தது.

அதனையடுத்து, பணிப்புறக்கணிப்பு தொடர்ந்ததுடன், இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement