பெர்பெச்சுவல் நிறுவனத்துக்கு மத்திய வங்கி ஆறுமாத தடை

0
42

பெர்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனம் இலங்கை மத்திய வங்கியுடன் மேற்கொள்ளக்கூடிய சகல வர்த்தக நடவடிக்கைகளுக்கும் ஆறுமாத காலத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் நிதிச்சபை விதித்திருக்கும் இந்தத் தடை அடுத்த ஆறு மாதங்களுக்கு அமுலில் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதான பங்கை வகிக்கும் பெர்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனம் பற்றிய விசாரணைகள் ஏற்கனவே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைகுழுவால் நடத்தப்பட்டு வரும் வேளையில் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுவதாக பொருளாதர நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com