பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 3000 ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை

0
14
Want create site? Find Free WordPress Themes and plugins.

பெருந்தோட்ட பாடசாலைகளுக்குத் திறமையான ஆசிரியர்கள் 3000 பேரை உளவாங்குவதற்கான அனுமதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ வழங்கியுள்ளார். இது தொடர்பான பேச்சுகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடாந்து வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டு அதன் மூலமாக ஆசிரியர்கள் உள்வாங்கப்பட உள்ளனர் என்று கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கண்டி கெங்கல்லை தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8 வகுப்பறைகளை கொண்ட இரண்டு மாடிக்கட்டடிடத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

கல்வி அபிவிருத்திக்காக அரசு உதவி செய்துவருகின்றது. அதே நேரத்தில் கண்டி தமிழ் வர்த்தகர் சங்கத்தைப் போல வெளிமாவட்டங்களிலும் இருக்கின்ற வர்த்தகர்களும் இவ்வாறான உதவிகளை கல்வித்துறைக்கு செய்தால் எமது கல்வித்துறை மிகவும் வேகமாக வளர்ச்சியடைய முடியும்.இது ஒரு சமூக உணர்வுடன் செய்யப்படுகின்ற ஒரு செயற்பாடாகவே நான் கருதுகின்றேன். அவர்களுக்கு அரசின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று அரசு கல்வித்துறையை அபிவிருத்திச் செய்வதற்கு அதிக நிதியை ஒதுக்குகின்றது. அதற்கு இவ்வாறான பொது அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்குகின்ற பொழுது இன்னும் அதிகமான வேலைகளை செய்ய முடியும்.

யார் ஆட்சி செய்தாலும் எமக்கு அதில் பிரச்சினை இல்லை. ஆனால், அவர்களிடம் இருந்து எமது சமூகத்திற்கான அனைத்து தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுடன் இணைந்திர்ப்பவர்களின் கரங்களிலேயே தங்கியிருக்கின்றது.

அந்த வகையிலேயே நான் அண்மையில் பிரதமரை சந்தித்த போது அவர் என்னிடம் கேட்டார், உங்களுடைய மலையக பாடசாலைகளின் அபிவிருத்தி எப்படி இருக்கின்றது என்று. அதற்கு நான் அவரிடம் கூறினேன், எங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறையே பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.அதற்கு அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டார் இது தொடர்பாக கலந்துரையாடி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 28ஆம் திகதி இது தொடர்பான விசேட கலந்தரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன் பின்பு வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த முறை ஆசிரியர்களை உள்வாங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் விடப்பட்ட தவறுகள் இம்முறை தவிர்க்கப்படும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments