பெருந்தொகை வல்லப்பட்டையுடன் இலங்கையர் இருவர் கைது

0
41

பெருந்தொகை வல்லப்பட்டை யுடன் இலங்கையர் இருவர் கைது

வல்லப்பட்டை

சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டையுடன் வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவரின் பயணப்பொதியில் 23 கிலோ 300 கிராம் வல்லப்பட்டை மறைத்துவைக்கப்பட்டிருந்ததுடன், மற்றுமொருவரின் பயணப்பொதியில் 30 கிலோ 200 கிராம் வல்லப்பட்டையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டையின் பெறுமதி 28 இலட்சம் ரூபாய் என, விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com